நான் எழுதுகிறேன்
என்/நம் அனுபவங்களை அனைவருடன் பகிர்ந்து கொள்ளவே இந்த வலைப்பூ.
Tuesday, January 1, 2013
Happy New Year 2013
மாயன் காலண்டர் பீதியில் இருந்து விடுபட்டு ஒரு வழியாக 2012 முடிவுற்று புத்தாண்டில் அடியெடுத்து வைத்துவிட்டோம். இந்த நேரத்தில் 2012ல் எனக்கான சில முக்கிய நிகழ்வுகளை நினைவுகூற விரும்புகிறேன்.
திடீரென்று திட்டமிட்டு கேனன் 550டி கேமரா வாங்கியது
கம்பெனியில் எதிர்பார்த்தது போல நல்ல நிலை.
முகில் பள்ளிக்கூடம் போக ஆரம்பித்தது
முகிலுக்கு திருப்போருரில் மொட்டை அடித்தது
இரண்டாவது முறையாக தாமரை கருத்தரித்தது
எதிர் பாராத சில முக்கியமானவர்களின் மறைவு
கடைசி சில மாதங்களில் ஏற்பட்ட அதிக வேலை பளு
மொத்தத்தில் நல்ல ஆண்டாகவே கடந்து விட்டது 2012.
2013 ஆம் ஆண்டும் மிகவும் சிறப்பாக அமைய எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
Saturday, June 19, 2010
புகைப்படங்கள் - 1
இடம்: திண்டுக்கல் மலைக்கோட்டை
மலைக்கோட்டையில் இருந்து...
கோட்டைச் சுவர்
சிதலமடைந்த கட்டிடங்கள்
மலைக்கோட்டையில் உள்ள கோயில், வெளிப்புறம்
கோயில் உள்ளே...
தடாகம்
சிறை அறைகள்
Monday, June 7, 2010
மொட்டை
என்னுடைய பையனுக்கு எங்கள் குலதெய்வ கோவிலில் மொட்டை போடுவதற்கு சென்றிருந்தோம். சொந்தங்களுடன் மிகவும் சந்தோசமாக கோவிலுக்கு சென்றோம். என் பையனுக்கு 9 மாதம், விவரம் தெரியாததால் நன்றாக விளையாடிக்கொண்டிருந்தான். மொட்டை போடுவதற்கு முன்னர் பொங்கல் வைக்க வேண்டும். அதற்கான வேலையில் இருந்ததால் வேறு
எந்த நினைப்பும் இல்லாமல் போகவே அதில் மும்மரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தேன்.
"மொட்டையடிக்க ஆள் வந்தாச்சி" அப்படின்னு ஒருத்தர் சொன்னதும் வயிற்றுக்குள் லேசாக ஒரு கலக்கம். இது வரை பள்ளி, கல்லூரி தேர்வுகள் எழுத செல்லும் நேரங்களில், வேலைக்கு நேர்முகத்தேர்வுக்கு செல்லும் நேரங்களில் தான் வயிறு கொஞ்சம் கலங்கியிருக்கிறேன்.
மொட்டை அடிக்கப்போவது என்னவோ என் பையனுக்கு மட்டும்தான். ஆனால் எனக்கு உள்ளுக்குள் ஏதோ ஒரு வித பயம். அந்த கணமே சற்று யோசித்தேன் நான் ஏன் இவ்வளவு பயப்படுகிறேன் என்று!.மொட்டையடிக்க ஆரம்பித்த உடன் என பையன் மிகவும் பயந்து விட்டான்.
வெயில் காலம் என்பதால் அவனுக்கு தலையில் வியர்க்கூறுகள் கொஞ்சம் இருந்ததால் கத்தி படும் நேரங்களில் அவன் கண்களில் ஏற்படும் மாற்றத்தையும், அவன் முகத்தில் தெரியும் பயத்தையும், பீறிட்டு வந்த கண்ணீரிலும் இருந்தும் அவன் வேதனையை நன்கு அறிய முடிந்தது. அவனுக்கு அழுகை அதிகமாகிக்கொண்டே சென்றது. அந்த நேரத்தில் எனக்கு கண்ணீர் வராமல் பார்த்துக்கொண்டேன். மொட்டை முடியும் சமயத்தில் என்னில் இருந்த அந்த பயம், ஒருவித கவலை, கலவரம் குறையத் தொடங்கியது.
அதன் பின்னர் காது குத்தும் படலம் ஆரம்பமாகியது. அங்கும் இதே கலவரம் தான். அதன் பின்னர் என் பையன் ஒரு வாரத்திற்கு யார் கூப்பிட்டாலும் செல்லவில்லை. குறிப்பாக அவன் தாய்மாமாவிடம் செல்லவே இல்லை. அம்மாவிடம் மட்டும் தான் ஒட்டிக்கொண்டிருந்தான்.
மொட்டையடிக்கும் நேரங்களில் சில அம்மாக்கள் கண்களில் இருந்து கண்ணீர் வருவதைக்கூட கவனித்திருக்கிறேன். அந்த நேரங்களில் எந்த தந்தைக்கும் கண்ணீர் வருவதில்லை. என்னைப்போன்று அவர்கள் உள்ளுக்குள் இதே கலவரத்துடன் இருந்திருக்கலாம். எல்லாம் முடிந்தவுடன் இது ஒரு ஆனந்த கலவரமாகவே தோன்றியது.
சுபம்.

Subscribe to:
Comments (Atom)