வணக்கம் நண்பர்களே,
பதிவுலகிற்கு நான் ஒன்றும் புதியவன் அல்ல. தொடங்கியிருக்கும் வலைப்பூ தான் புதிது. வலைப்பூ அதிகம் படிப்பவர்களில் நானும் ஒருவன். சில வலைப்பூக்களை விடாது தொடர்ந்து படித்து வருகிறேன். இங்கு சொந்த அனுபவங்களையும், என்னை பாதிக்கும் நிகழ்வுகளையும், அனைவருடனும் பகிர்ந்து கொள்வதற்காகவே இந்த வலைப்பூ. அனுபவங்கள் மட்டுமல்ல, விளையாட்டு, பொழுது போக்கு, கல்வி, கணினி, நகைச்சுவை, கவிதை, சிறுகதை என்று என்னால் முடிந்ததை இங்கு கொடுக்க இருக்கிறேன்.
எனது பதிவுகளில் சொல், பொருள் பிழைகள் இருந்தால் தவறாமல் அதை சுட்டிக்காட்ட வேண்டுகிறேன். வலைப்பூ ஜாம்பவான்களின் நல்லாசியுடன் இன்று முதல் பதிய ஆரம்பிக்கிறேன்.
No comments:
Post a Comment